ADDED : ஆக 13, 2011 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:இளம்பெண்ணை மானபங்கம் படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்த
வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரத்தை
சேர்ந்தவர் ஏழுமலை,38.
இவரது நிலத்தில் உள்ள மரத்தில் ஒதியத்தூரை சேர்ந்த
புஷ்பராஜ், 24 என்பவர் அனுமதியின்றி நார்த்தங்காய் பறித்துள்ளார். இதனை
ஏழுமலை மகள் சுகன்யா,16, தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், அவரை
மானபங்கப் படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில்
கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து புஷ்பராஜை கைது செய்தனர்.