/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பார்வையற்றோருக்கான கைப்பந்து போட்டி
/
பார்வையற்றோருக்கான கைப்பந்து போட்டி
ADDED : ஜூன் 08, 2025 10:30 PM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடந்தது.
விழுப்புரம் மற்றும் தர்மபுரி கைப்பந்து அணிகள் சார்பில் நடந்த கைப்பந்து போட்டியில், மாநில அளவில் 12 அணிகள் பங்கேற்றது.
போட்டிகளை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் தீனதாயாளன், பழனிவேலு ஐ.டி.ஐ தாளாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன், கைப்பந்து அமைப்பு செயலாளர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார். கன்னியாகுமரி, சென்னை, தென்காசி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்றது.
அணி வீரர்களுக்கு பில்ராம்பட்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், புரவலர் சந்திரசேகர், ஆசிரியர் ஜனார்த்தனன் சால்வை அணிவித்து வரவேற்றனர். இப்போட்டியில், தருமபுரி மாவட்ட அணி முதலிடமும், கன்னியாக்குமரி அணி 2ம் இடம் பெற்றது. ஆசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.