/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொண்டர்களை அரவணைத்து பணியாற்ற வேண்டும்: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அறிவுரை

ADDED : ஜன 05, 2024 12:31 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகத்திற்கு, கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., நேற்று காலை, கட்சி நிர்வாகிளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் லோக்சபா தேர்தலில் கட்சித் தலைமை முடிவின்படி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற, கட்சியினர் தீவிரமாக பாடுபட வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கட்சியின் பிற அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முன்னதாக, கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சண்முகத்திற்கு சால்வை அணிவித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.