/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : நவ 16, 2024 05:27 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தொடர்பாக அ.தி.முக., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாம் இன்று 16 மற்றும் நாளை 17ம் தேதி மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது.
இதையொட்டி அ.திமு.க., சார்பில் வார்டு வாரியாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.
இதில், நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.