ADDED : ஏப் 03, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: கண்டமங்கலம் ஒன்றியம், நெற்குணம் ஊராட்சியில் 2 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் தட்டு நாற்றுக்களை பயன்படுத்தி 60க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மகளிர் திட்ட இணை இயக்குநர் செந்தில்வடிவு, வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் சுரேஷ், கலெக்டரின் விவசாய நேர்முக உதவியாளர் சரவணன், வேளாண் உதவி இயக்குநர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
