/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை
/
வி.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை
ADDED : டிச 12, 2024 06:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தனர்.
விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கிேஷார் (7ம் வகுப்பு), தனுஷ்கா (5 ம்வகுப்பு), தரணி ஸ்ரீ (6ம் வகுப்பு) ஆகியோர் செஸ் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல், நிதிஷ் (8ம் வகுப்பு), லித்திகா ஸ்ரீ (5ம் வகுப்பு) கீர்த்திவாசன் (பிளஸ் 1), சபரீஷ் (பிளஸ் 2) ஆகியோர் கராத்தே போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், சிலம்பாட்ட போட்டியில், ஐந்தாம் வகுப்பு மாணவர் குகன், பேட்மிட்டன் போட்டியில் ௮ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் ஆகியோர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர். விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சோழன் பாராட்டு தெரிவித்தார். தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்விராஜ், முன்னாள் கவுன்சிலர் அன்பு, வழக்கறிஞர் மனோ உடனிருந்தனர்.