/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி மதகு சேதமானதால் விளை நிலங்களில் புகும் நீர்
/
ஏரி மதகு சேதமானதால் விளை நிலங்களில் புகும் நீர்
ADDED : அக் 28, 2025 06:08 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெரிய ஏரியில் சேதமடைந்த மதகை சீரமைக்காததால் மழைநீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வழிந்தோடி பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள ஏரி 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் இரண்டு மதகுகள் உள்ளன. தற்போது மேற்கு பகுதியில் உள்ள மதகு பழுதடைந்துள்ளதால் சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஏரிக்கு வரும் நீரை சேமிக்க முடியாமல் மதகு வழியாக விளை நிங்களில் புகுந்துள்ளது. இதனால் நெல், சவுக்கை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்த இந்த மதகில் கற்கள் பெயர்ந்து பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் பெயரளவில் புனரமைக்கப்பட்ட இந்த மதகு அதன் பிறகு விவசாயிகள் பலமுறை பழுது குறித்து சீரமைக்க கோரிக்கை வைக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவி சாய்க்காததால் தற்பொழுது பயிர்கள் அதிகமாக சேதமடைகின்றன.
விக்கிரவாண்டி பெரிய ஏரியில் சேதமடைந்த மதகு களையும், ஏரி நீர் பாசன வாய்க்காலை சீரமைத்து ஏரியில் மழை நீர் சேமித்து நெற்பயிர் சாகுபடிக்கு வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், கலெக்டரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கொண்டு சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

