/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
/
வீடூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
ADDED : டிச 20, 2024 04:53 AM
விக்கிரவாண்டி: வீடூர் அணைத்து நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளி யேற்றம் நிறுத்தப்பட்டது.
திண்டிவனம் அடுத்த வீடூர் அணைக்கு கடந்த 15 தினங்களுக்கு முன் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக அணையில் நீர் மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து அணை பாதுகாப்பு கருதி கடந்த 18ம் தேதி வரை உபரி நீரை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து முற்றிலும் குறைந்து 916 கன அடியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ேஷாபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் கண்காணித்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவதை நிறுத்தினர்.
நேற்று பிற்பகல் 4:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடி (32 அடி) கொள்ளவில், 450.311 மில்லியன் கன அடி (30.025அடி) இருப்பு உள்ளது. இது அணையின் கொள்ளவில் 74 சதவிகித நீர் இருப்பு ஆகும்.