/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நன்னாடு கிராமத்தில் குடிநீர் 'கட்'; காலி குடங்களுடன் சாலை மறியல்
/
நன்னாடு கிராமத்தில் குடிநீர் 'கட்'; காலி குடங்களுடன் சாலை மறியல்
நன்னாடு கிராமத்தில் குடிநீர் 'கட்'; காலி குடங்களுடன் சாலை மறியல்
நன்னாடு கிராமத்தில் குடிநீர் 'கட்'; காலி குடங்களுடன் சாலை மறியல்
ADDED : ஏப் 07, 2025 06:42 AM

விழுப்புரம்;
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெரிய குடிநீர் டேங்க் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. குடிநீர்தேக்க தொட்டிக்கு, நீர் ஏற்றும் மோட்டார் மின் ஒயரை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்றுள்ளனர். இதனால், டேங்கிற்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை. இதற்கு முன்பு 3 முறை மோட்டார் மின் ஒயரை திருடி சென்றது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், 4வது முறையாக மோட்டார் மின் ஒயர்கள் திருடப்பட்டதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற முடியாததால், கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நன்னாடு பஸ் நிறுத்தம் எதிரே நேற்று காலை 8:30 மணிக்கு காலி குடங்களுடன், விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வவினாயகம் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோட்டார் மின் ஒயர் திருடியவர்களை விரைவில் கைது செய்வதாகவும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் ஒயர் புதுப்பித்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதனையேற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டு 9:00 மணிக்கு கலைந்து சென்றனர்.