/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீர் வழிப்பாதை அடைப்பு: தனி நபர்கள் அடாவடி
/
நீர் வழிப்பாதை அடைப்பு: தனி நபர்கள் அடாவடி
ADDED : மார் 28, 2025 05:20 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மழைநீர் வெளியேறும் கல்வெர்ட் தனிநபர்களால் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி டோல்கேட் கும்பகோணம் சாலை பிரியும் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் முன்பே மழைநீர் வெளியேற கல்வெர்ட் இருந்தது.
நான்கு வழிச்சாலை அமைத்த போது அந்த கல்வெர்ட் விரிவுபடுத்தி சாலையின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டது.
தற்போது, மேம்பாலம் பணிக்காக சர்வீஸ் சாலையை விரிவுபடுத்தியபோது நீர் வெளியேறும் வகையில் கூடுதலாக கல்வெர்ட் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த பெஞ்சல் புயலின் போது ஏற்பட்ட வெள்ளநீர் கல்வெர்ட் வழியே கிழக்கு பகுதியில் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் கிழக்கு பகுதியில், தனி நபர்கள் அந்த பள்ளத்தை மண் கொட்டி துார்த்தபோது மழை நீர் வெளியேறும் கல்வெர்ட் முகப்பு பகுதியிலும் மண் கொட்டி முழுதுமாக அடைத்துள்ளனர்.
தற்போது, கோடைகாலம் என்பதால் திடீர் கோடை மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் மேற்கு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இயற்கை இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் நகாய் அதிகாரிகள் இந்த கல்வெர்ட்டை பார்வையிட்டு நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும்.