/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., கூட்டணியில் சுதந்திரமாக இருக்கிறோம் பழனிசாமி திட்டவட்டம்
/
பா.ஜ., கூட்டணியில் சுதந்திரமாக இருக்கிறோம் பழனிசாமி திட்டவட்டம்
பா.ஜ., கூட்டணியில் சுதந்திரமாக இருக்கிறோம் பழனிசாமி திட்டவட்டம்
பா.ஜ., கூட்டணியில் சுதந்திரமாக இருக்கிறோம் பழனிசாமி திட்டவட்டம்
ADDED : ஜூலை 12, 2025 11:20 PM
செஞ்சி: 'பா.ஜ., கூட்டணியில் நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம். வேண்டுமென்றால் கூட்டணி; வேண்டாம் என்றால் இல்லை,' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் நாட்டார்மங்கலம் கூட்டு சாலையில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசியதாவது:
மாவட்டத்தில் மக்கள் திட்டங்களை ரத்து செய்தவர் ஸ்டாலின். திண்டிவனத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் சிப்காட் கொண்டு வந்தோம். இப்போது நாங்கள் தான் கொண்டு வந்தோம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவித்திருந்தோம். அதை அவர் ரத்து செய்தார். கள்ளக்குறிச்சியில் கால்நடை ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அதையும் ரத்து செய்தார்.
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் துவங்கப்படும். மாநிலத்திலேயே கல்வியில் முதல் மாவட்டமாக மாற்றப்படும். புதிய தொழில்கள் தொடங்கப்படும்.
நாங்கள் பா.ஜ., கூட்டணியில் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். வேண்டும் என்றால் கூட்டணி; வேண்டாம் என்றால் இல்லை.
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ., உடன் கூட்டணி வைத்துள்ளோம்.
தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் நல்லது. அ.தி.மு.க., வைத்தால் கெட்டது எனில், இது எந்த விதத்தில் நியாயம். நான் ஸ்டாலின் போல அப்பா செல்வாக்கில் பதவிக்கு வரவில்லை. கிளைச் செயலாளரில் துவக்கி பொதுச் செயலாளராக வந்திருக்கின்றேன்.
அ.தி.மு.க., வில் பழனிசாமி இல்லையென்றால், சண்முகம் முதலமைச்சர். இது தொண்டர்களுக்கான,
சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி.
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் ஆட்சி ஸ்டாலினிடம் ஆட்சி கிடைத்து விட்டது. ஸ்டாலின் 'டென்ஷன்' பேர் வழி. எதையும் தாங்கும் சக்தி இல்லை. நான் அப்படி இல்லை. விவசாயி, எதற்கும் அஞ்சியது கிடையாது. உறுப்பினர் சேர்க்கையை வீடு வீடாக போய் கதவைத் தட்டி பிச்சையை போல சேர்க்கும் கேவலமான நிலைமை தி.மு.க., விற்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

