/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு விரைவில் தெரிவிப்போம்: அன்புமணி
/
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு விரைவில் தெரிவிப்போம்: அன்புமணி
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு விரைவில் தெரிவிப்போம்: அன்புமணி
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு விரைவில் தெரிவிப்போம்: அன்புமணி
ADDED : ஜன 25, 2024 06:34 AM
விருத்தாசலம் : எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து விரைவில் தெரிவிப்போம் என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
விருத்தாசலத்தில் பா.ம.க., சார்பில் நடந்த சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
கடலுார் மாவட்டத்தை பிரித்து, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பா.ம.க.,வின் நீண்ட நாள் கோரிக்கை. அதேபோல், மேலும் 7 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.
என்.எல்.சி.,யில், சமீபத்தில் 270 பேருக்கு தற்காலிக வேலை வழங்கப்பட்டுள்ளது.
அதில் 250 பேர் தி.மு.க.,வினர் என தெரிகிறது. இதுதொடர்பாக, நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உண்மை இருந்தால் சம்மந்தப்பட்டவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
1867ல் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வள்ளலார் சத்திய ஞான சபைக்கு 106 ஏக்கர் நிலம் வழங்கினர். இதில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால், அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். மீறி அந்த இடத்தை அரசு கையகப்படுத்தினால் பா.ம.க., சார்பில் போராட்டம் நடக்கும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எதிர்வரும் லோக்சபா தேர்தல் நிலைபாட்டை விரைவில் வெளியிடுவோம். தமிழ்நாடு என்பதை கஞ்சா நாடு என மாற்றும் அளவிற்கு தெருவிற்கு தெரு கஞ்சா விற்பனை நடக்கிறது. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. நீட் தேர்வு மையங்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரை கொள்ளையடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.