/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் அமைச்சர் மஸ்தான் சவால்

ADDED : மார் 18, 2024 05:44 AM
செஞ்சி : 'ஸ்டாலின் உறுதியாக இருந்ததால் 'இண்டியா' கூட்டணியை உடைக்க முடியவில்லை' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
செஞ்சியில் நடந்த ஆரணி தொகுதி தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் ஜனநாயகத்தை காப்பாற்ற துணிந்து நின்றவர்கள். பல்வேறு மாநில தலைவர்கள் இன்றைக்கு ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாசிசத்தை வீழ்த்துவேம், ஜனநாயகத்தை காப்போம் என ஸ்டாலின் ஜனநாயக குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார். நாம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டை போல் ஜனநாயகம் உள்ள பகுதி இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என ஆங்கில பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
தமிழகத்தின் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது. மோடி தமிழகத்திற்கு ஏன் மீண்டும் மீண்டும் வருகிறார். மோடி சொன்னதை இரண்டு முறை கேட்டோம். எந்த வளர்ச்சியும் இல்லை. ஏன் ஸ்டாலின் சொல்வதை கேட்க கூடாது என மற்ற மாநிலங்கள் முடிவு செய்து விட் டன. அங்குள்ள தலைவர்கள் சொல்லும் தகவல்படி 'இண்டியா' கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும்.
தி.மு.க., கூட்டணியை உடைக்க பார்த்தனர். ஸ்டாலின் உறுதியாக இருந்ததால் அது முடியவில்லை. மிக சாதுரியமாக கூட்டணியை கையாண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் 2 சட்டசபை தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். இதை நான் சவாலாக சொல்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மஸ்தான் பேசினார்.