/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அஞ்சல் துறை சார்பில் நெசவாளர் தினம்
/
அஞ்சல் துறை சார்பில் நெசவாளர் தினம்
ADDED : ஆக 08, 2025 02:02 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் அஞ்சல் துறையின் சார்பில் உலக நெசவாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உலளக நெசவாளர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அஞ்சல் கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.திருக்கோவிலுார் உட்கோட்ட ஆய்வாளர் உமாபதி முன்னிலை வகித்தார்.கண்டாச்சிபுரம் போஸ்ட் மாஸ்டர் விஜயகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உலக நெசவாளர் தினத்தையொட்டி ஜெயசீலன் நெசவாளர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார்.தொடர்ந்து நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,வெங்கடேசன்,கிருஷ்ணமூர்த்தி,திலகம் உள்ளிட்ட நெசவாளர்கள் பேசினர்.
தொடர்ந்து அஞ்சல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு ஆதார் பெயர் சேர்ப்பு, திருத்த முகாம் நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட பயனாளிகள் ஆதார் முகாமில் பங்கேற்றனர்.
நெசவாளர் தின நிகழ்ச்சியில் கண்டாச்சிபுரம்,மடவிளாகம், அங்குராயநத்தம் பகுதிகளைச் சேர்ந்த நெச வாளர்கள் மற்றும் கண்டாச்சிபுரம் கிளை அஞ்சலக அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உட்ப ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் துணை அஞ்சலக ஊழியர்கள் செய்தனர்.