ADDED : பிப் 08, 2026 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுார் பெருந்தேவி தாயார் சமேதவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று நடந்த பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமதே வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது.
வி.சாத்தனுார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேள்வி மற்றும் பூஜைகளை வரதராஜ பட்டாச்சாரியார், கோகுலகிருஷ்ணன் பட்டாச்சாரியார் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறங்காவலர் துறை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்தனர்.

