ADDED : ஆக 25, 2026 08:42 PM
விழுப்புரம்: விழுப்புரம் ஆளவந்தார் நாயுடு, கோல்டன் மார்பிள்ஸ், ஓட்டல் கோல்டன் பார்க் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் பொது செயலாளர் பிரேம்நாத் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் விழுப்புரம் நந்தகோபால் நாயுடு, ரமணிபாய் ஆகியோரின் பேத்தியும், பிரேம்நாத், சந்தானலட்சுமி ஆகியோரது மகளுமான ஹரிணி – கிரண்ரான் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, லட்சுமணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன், காசீம் ஹார்டுவேர்ஸ் அபுதாகீர், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் ராஜசேகரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, அர்ச்சனா ஓட்டல் உரிமையாளர் சுப்புராமன், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் முரளிதரன், புஷ்பம் டிம்பர் டைல்ஸ் நிர்மல், மது, ஏ.எஸ்.ஜி., கோபி, பேபி ஸ்டோர்ஸ் லெனின், சதீஷ், ரியல் எஸ்டேட் முருகன், சதீஷ்குமார், நாகராஜன் ஏஜென்சிஸ் சவுந்தர்ராஜன், சேம்பர் ஆப் காமர்ஸ் இணை செயலாளர் சுரேஷ்குட்டி, ஸ்ரீ துவாரகாநாத் எண்டர்பிரைசஸ் மணிஷ் உட்பட அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வருகை புரிந்தோரை பிரேம்நாத் – சந்தானலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். கோல்டன் மார்பிள்ஸ், கோல்டன் பார்க் உரிமையாளர் மோகித்ராம் நன்றி கூறினார்.
