/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பில் களை மேலாண்மை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
/
கரும்பில் களை மேலாண்மை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
ADDED : பிப் 21, 2024 08:12 AM
விக்கிரவாண்டி : கரும்பு சாகுபடியில் களை மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.
கரும்பு விரிவாக்கத் துறை அறிக்கை:
முண்டியம்பாக்கம் செம்மேடு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு பயிரில் வளர்ந்த நடவு மற்றும் கட்டை கரும்பு வயல்களில் கொடிவகை, புல் வகை களை செடிகள் அதிகம் காணப்படுகிறது. இவைகள் கரும்பு பயிருடன் வளர்ந்து பயிருக்கு அளிக்கும் உரம் நீர் போன்ற இடுபொருட்களை வேகமாக கிரகித்துக் கொள்கிறது. இதனால், கரும்பு பயிரின் வளர்ச்சி பாதித்து மகசூல் குறைகிறது.
இத்தகைய செடிகளைக் கட்டுப்படுத்த கரும்பு வரப்பு, வயல்களைச் சுற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். கரும்பு சாகுபடியில் ஆறு மாதத்திற்குள் தோகைகளை உதிர்த்து விட வேண்டும். இதனால் களைகளை அப்புறப்படுத்த முடியும்.
கொடி வகை களைகள் அதிகமாக உள்ள வயலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2, 4, டி சோடியம் சால்ட் 10 கிராம் மற்றும் மெட்ரிபூசீன் 2 இரண்டு கிராம் அளவிலும்; புல் வகை களைகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2, 4, டி அமலன் சால்ட் 10 மி.லி., மற்றும் மெட்ரிபூசீன் 4 கிராம் அளவில் களைக் கொல்லி மருந்தினை கலந்து செடிகள் நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகள் தங்கள் கரும்பு வயல்களில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தி கரும்பு மகசூலை அதிகரித்து பயனடையலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

