/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய இருதய கலை கல்லுாரி வரவேற்பு நிகழ்ச்சி
/
துாய இருதய கலை கல்லுாரி வரவேற்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 30, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பேரணியில் உள்ள துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நடைபெற்றது.
கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கி, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், கற்கும் முறை பற்றி கூறினார்.
முதல்வர் டேவிட் சவுந்தர், கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள், மேம்பாடு பற்றி தெரிவித்தார். முன்னதாக, பவுலின் மேரி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.