தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிவனடியார்களுக்கு வரவேற்பு

சிவனடியார்களுக்கு வரவேற்பு

சிவனடியார்களுக்கு வரவேற்பு


ADDED : செப் 28, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி வழியாக திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை சென்ற சிவனடியார்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டிவனம் – திருவண்ணாமலை பாத யாத்திரை சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 20வது ஆண்டாக நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திண்டிவனம் மரகதாம்பிகை திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலைக்கு நடை பயணம் துவங்கினர்.

மதியம் 12:00 மணியளவில் செஞ்சிக்கு வந்த நடைபயண குழு நிர்வாகிகள் துரை, மூர்த்தி, பாலாஜி, மணி, கார்த்திக் ஆகியோருக்கு பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், விவேகானந்தர் பேரவைத் தலைவர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுராஜன், ஆர்.எஸ் எஸ்., நாராயணமூர்த்தி மற்றும் நாகராஜ், வாசு, கணபதி, கஜேந்திரன் உள்ளிட்ட இந்து அமைப்பினர் சிவனடியார்களை வரவேற்றனர். சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று திருவண்ணாமலை சென்றடையும் சிவனடியார்கள் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us