ADDED : நவ 29, 2025 08:28 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: காணை ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த விழா கொண்டாடப்பட்டது.
காணையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மத்திய ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் பழனி, சிவக்குமார், சக்கரவர்த்தி, மதன், நாராயணசாமி, கருணாகரன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன், இளைஞரணி அமைப்பாளர் மணியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
