ADDED : பிப் 27, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி ஒன்றியம். பழவலம், மலையரசன்குப்பம், ராமராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் பூங்காவனம் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் பாண்டுரங்கன், வாசு, அய்யாதுரை, ஊராட்சி துணைத் தலைவர் செந்தில், முன்னாள் தலைவர் நாராயணன், நிர்வாகிகள் ராஜேஷ், ஆசை தம்பி, ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
