ADDED : மார் 16, 2025 07:23 AM

அ நிறம் | அளவு
மயிலம்; மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் பிறந்த நாளையொட்டி நடந்த விழாவிற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் தேசிங்கு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் பிரபாகரன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார்.
விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கேணி, தன்ராஜ், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
