/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாக்கம் கூட்ரோட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
பாக்கம் கூட்ரோட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜன 19, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., ன் 108 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
பாக்கம் கூட்ரோட்டில் நடந்த விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொந்திரெட்டிப்பாளையத்தில் நடந்த விழாவில் கிளை செயலாளர் சவுந்தர்ராஜன், மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கினார்.

