ADDED : பிப் 18, 2026 04:46 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி ஒன்றியம், சத்தியமங்கலம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அபர்ணா ரவிசங்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் புவனா செந்தில் குமார், ஆரோக்யராஜ், நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
