/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
/
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : மார் 03, 2026 03:25 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் முதல் வர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் நகர பகுதிக்குப்பட்ட 21வது வார்டு நரசிங்கபுரம், 29வது வார்டு மருதுார், 36வது வார்டு ஆசாகுளம், 32, 35வது வார்டு வழுதரெட்டி, 1வது வார்டு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வீடு, வீடாகாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி, வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வரவும், தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.
நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் சக்கரை, வெற்றிவேல், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், நகர நிர்வாகிகள் சுந்தர், கணேசன், மனோகர், பிரகாஷ், சேகர், பாரதி, சலீம், ரவி, ஜனா, கோடீஸ்வரன், முருகன், ராஜ்குமார், ராஜ்மோகன், பாண்டியன், சபரி மற்றும் நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

