/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ஜமாபந்தி முகாமில் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
/
விழுப்புரம் ஜமாபந்தி முகாமில் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் ஜமாபந்தி முகாமில் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் ஜமாபந்தி முகாமில் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : மே 30, 2025 11:56 PM

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி முகாமில் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. தாசில்தார் கனிமொழி தலைமை தாங்கினார். தனி தாசில்தார்கள் ஆதிசக்திசிவகுமரிமன்னன், ஆனந்தன், துணை தாசில்தார்கள் வேங்கடபதி, குணசேகரன், திருமாவளவன், தலைமை சர்வேயர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாபந்தி அலுவலர் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் முகுந்தன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதில், முழுப்புலன் பட்டா மாற்றம் 92 பேருக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 28 பேருக்கும், இலவச வீட்டுமனை பட்டா 55 பேருக்கும், புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் 26 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் 50 பேருக்கும் என, மொத்தம் 254 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஜமாபந்தி முகாமில், மொத்தம் 1,342 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 270 மனுக்களுக்கு, ஏற்கனவே உடனடியாக தீர்வுகாணப்பட்டது குறிப்பிடதக்கது.