ADDED : பிப் 04, 2026 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி வள்ளலார் சத்திய தருமச்சாலையில், தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடந்தது. காலை 11:00 மணியிலிருந்து, மாலை 5:00 மணி வரை, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
முன்னாள் சேர்மன் ஜனகராஜ், கோபிசிகாமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மக்களுக்கு, 5 கிலோ அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தரும சாலை நிர்வாகிகள் அண்ணாமலை, சிவக்குமார், செல்லமுத்து, பலராமன், பாரதி, சரவணபவன், பிரேம்ராஜன், சங்கர், அசோக்குமார், தினேஷ், பாலாஜி கலந்துகொண்டனர்.

