UPDATED : அக் 07, 2026 05:21 AM
ADDED : அக் 06, 2026 06:06 PM

விழுப்புரம்: விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் ஜெயஅண்ணாமலை அறிக்கை:
வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை சார்பில் வரும், 11ம் தேதி மூன்று வேளை தொடர் அன்னதானம் மற்றும் மாலை 4:00 மணியளவில் 1000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழுப்புரம் எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் கேசவன் தெரு, வள்ளலார் இல்லத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேற்று 6ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை பயனாளிகளுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
