ADDED : நவ 28, 2026 07:33 PM

திண்டிவனம்: மயிலம் தொகுதிக்குட்பட்ட வைரபுரம், நெய்குப்பி கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.,28) நடந்தது.
மயிலம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம், தொகுதி மக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் மிஷின்கள், மூன்று சக்கர சைக்கிள், இஸ்திரி பெட்டி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயன், விநாயகமூர்த்தி, ராமதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தி, ஜெ.,பேரவை துணைச் செயலாளர் சக்தி பெரியதம்பி, பாசறை கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ.,விடம் திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்ட போது, ‘உச்சநீதி மன்றமே தீர்ப்பு கூறிவிட்ட நிலையில், நான் அதுபற்றி எந்த கருத்தும் கூற முடியாது’ என்றார்.
