ADDED : செப் 30, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
கோலியனுாரில் நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் சார்பில், பிரசித்தி பெற்ற கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் மற்றும் புத்துவாயம்மன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டனர்.
கோவில் வளாகம், குளக்கரை, கோலியனுார் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் ஆகிய இடங்களில் துாய்மை பணி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி அலுவலர் செந்தில்குமாரி, ஆசிரியர்கள் குழந்தைவேல், காங்கேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
