/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
/
போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
ADDED : ஜன 14, 2026 06:08 AM

விழுப்புரம்: போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்க மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சென்னை புறவழிச்சாலை முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலம், ராமச்சந்திராகாலி பகுதியைச் சேர்ந்த ஹலீம் அக்பர் மோல்லா மகன் ஹலீம் முல்லா, 26; என்பதும், போதை தரக்கூடிய 1152 மாத்திரைகள் மற்றும் 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விழுப்புரத்தில் பத்தர் வேலை செய்யும் இவர், மேற்கு வங்கத்திற்கு சென்று வந்தபோது, போதை மாத்திரை வாங்கி வந்துள்ளார். அந்த மாத்தி ரைகளை விழுப்புரத்தில் தன்னுடன் வேலை செய்யும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து அலீம் முல்லாவை கைது செய்து, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

