/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய தார்சாலை போடுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
/
புதிய தார்சாலை போடுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
புதிய தார்சாலை போடுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
புதிய தார்சாலை போடுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
ADDED : செப் 25, 2024 04:09 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த இடங்களில் புதிய தார் சாலை போடுவதில் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில், 268 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதுவரை 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில், பிரதான சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ராஜாஜி வீதி, திண்டிவனம் செஞ்சி ரோட்டிலிருந்து சந்தை மேடு வரையிலான சாலைகளில் பணிகள் முடிவடைந்து 4 மாதங்களுக்கும் மேலாகி விட்டது.
அதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் புதிய தார் சாலை போடுவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு 15 கோடி ரூபாய் செலுத்துப்பட்டுள்ளது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறை இதுவரை தார்சாலை போட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குண்டும், குழியுமாக உள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியமல் கடும் அவயதிடைகின்றனர். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். வெய்யில் காய்ந்தால் சாலையில் மண் புழுதி பறந்து சுகதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் வழங்கிய தொகையை கொண்டு, பிரதான போக்குவரத்து சாலைகளில் புதிய தார் சாலைகள் போட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.