/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியல் நிகழ்ச்சிகளால் மக்கள் அவதி செஞ்சி நகருக்கு விடிவுகாலம் எப்போது
/
அரசியல் நிகழ்ச்சிகளால் மக்கள் அவதி செஞ்சி நகருக்கு விடிவுகாலம் எப்போது
அரசியல் நிகழ்ச்சிகளால் மக்கள் அவதி செஞ்சி நகருக்கு விடிவுகாலம் எப்போது
அரசியல் நிகழ்ச்சிகளால் மக்கள் அவதி செஞ்சி நகருக்கு விடிவுகாலம் எப்போது
ADDED : ஜன 21, 2025 06:47 AM
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரமாக செஞ்சி உள்ளது. நகரின் வளர்ச்சி மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக செஞ்சி நகரின் முக்கிய சாலைகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசல் நிலவி வருகிறது.
அத்துடன், சென்னை - திருவண்ணாமலை, புதுச்சேரி - பெங்களூருக்கான முக்கிய வழியாக இருப்பதால் செஞ்சி நான்கு முனை கூட்ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இந்த நெரிசலான இடத்தில் விழுப்புரம் சாலை துவக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள், கட்சி துவக்க விழா, இரங்கல் கூட்டம், சங்க விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி தருகின்றனர்.
இந்த இடம் வேலுார், ராணிப்பேட்டையில் இருந்து திருச்சி, விழுப்புரம் செல்லும் கனரக வாகனங்கள் திரும்பும் முக்கிய இடம். மேலும், விழுப்புரம் மார்க்கம் செல்லும் பஸ்களை இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இங்கிருந்து ஆட்டோ சேவையும் நடந்து வருகிறது.
இங்கு விழா நடத்தும் அரசியல் கட்சியினர் போக்குவரத்து பாதிப்பு குறித்து பொருட்படுத்துவதில்லை. போலீசாருக்கும் ஒத்துழைப்பும் தருவதில்லை.
குறிப்பாக ஆளும் கட்சி விழா என்றால் பல மணி நேரம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்கின்றனர்.
விழாவின் போது அன்னதானம், நலத்திட்ட உதவி என அறிவித்து நுாற்றுக்கணக்கில் மக்களை குவித்து விடுகின்றனர்.
குறுகிய இடத்தில் திரளும் மக்களை கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகள் இருப்பதில்லை. குறுக்கிலும், நெடுக்கிலும் தாறுமாறாக செல்லும் பொதுமக்களை விபத்தில் சிக்காமல் தடுக்க போலீசார் படாதபாடு படுகின்றனர்.
எனவே பொது மக்களுக்கு இடையூறாகவும், ஆபத்து விளைவிக்கும் வகையிலும் உள்ள இந்த இடத்தில் விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த மாற்று இடத்தில் அனுமதி தர போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

