இரு கட்சிகள் களப்பணியில் விறுவிறு மவுனம் காக்கும் விசில் நிர்வாகிகள்
இரு கட்சிகள் களப்பணியில் விறுவிறு மவுனம் காக்கும் விசில் நிர்வாகிகள்
ADDED : ஏப் 03, 2026 05:45 AM
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தேர்தல் களப்பணியை துவங்கிய நிலையில் த.வெ.க., நிர்வாகிகள் சுணக்கம் காட்டுகின்றனர்.
விழுப்புரம் சட்டசபை தொகுதி வேட்பாளர்களாக தி.மு.க., லட்சுமணன், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா, நா.த.க., அபிநயா, த.வெ.க., மோகன் ஆகியோர் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி, விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.,வினர் நகரை சுற்றிலும், அ.தி.மு.க.,வினர் கிராமப்புறங்களை சுற்றிலும் தீவிர தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய ஆதரவாளர்களை சந்திப்பதும், மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும் தீவிர பணிகளில் இறங்கியள்ளனர். த.வெ.க., நிர்வாகிகள் தனியாக ஆலோசனை செய்வது மட்டுமே பணியாக கொண்டுள்ளனர். இவர்கள் வீதிகளில் இறங்கி மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபடாமல் தேர்தல் களப்பணியில் மிகவும் தொய்வாக உள்ளனர்.
மறுபுறத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் எங்குள்ளனரே என தெரியாமல் வேட்பு மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு மவுனமாக உள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் நடுத்தரமான வரவேற்பை பெற்றுள்ள விசில் சின்ன வேட்பாளரும், நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை துவக்க நல்ல நாளை பார்த்து காத்திருப்பது, இரு பெரிய கட்சிகளுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
