/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ரகசிய ஆலோசனைக்கு நாங்க எதற்கு' :புலம்பிய அ.தி.மு.க., வார்டு நிர்வாகிகள்

ADDED : மார் 19, 2024 10:47 PM
விழுப்புரத்தில், அ.தி.மு.க., தேர்தல் பணி குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், கூட்டத்தில் பங்கேற்க வந்த 200 பேர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலக ஹாலில் அமர்ந்திருந்தனர்.
ஆனால், பக்கத்து அறையில் 10 முதல் 15 பேரிடம் மட்டும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய ராதாகிருஷ்ணன், வெளியே வந்து, 'வார்டு நிர்வாகிகள் அனைவரும் ஓட்டு வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்' என அறிவுரை வழங்கி விட்டு சென்று விட்டார். இதனால், வெறுத்துப்போன வார்டு நிர்வாகிகள் பல மணி நேரம் காத்திருந்த தங்களிடம் கருத்தை கேட்காமல், குறிப்பிட்ட சிலரிடம் ரகசிய ஆலோசனை நடத்த எங்களை எதற்கு அழைக்க வேண்டும் என புலம்பியபடி சென்றனர்.