/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகாலட்சுமியுடன் ஹயக்ரீவர் அருள்பாலிப்பது ஏன்?
/
மகாலட்சுமியுடன் ஹயக்ரீவர் அருள்பாலிப்பது ஏன்?
ADDED : செப் 05, 2025 07:53 AM
பகவான் விஷ்ணு பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள் தாங்கி ஆலிலை மேல் பாலனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகை படைப்பதற்காக தன் நாபி கமலத்தில் இருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்பு தொழிலை ஆரம்பித்தார்.
ஒரு முறை பெருமாளின் நாபி கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர் திவளைகள் தோன்றி மது, கைடபன் என்ற அசுர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில் பிரம்மனியிடமிருந்த வேதங்களை அபகரித்து தாங்களே படைப்பு தொழிலை புரிய ஆசைப்பட்டனர்.
குதிரை முகம் கொண்டு பிரம்மனியிடருந்து வேதத்தை பறித்துக் கொண்டு பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளை சரணடைந்தார்.
பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகத்திற்கு வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்ட எடுத்து பிரம்மனிடம் கொடுத்தார்.
அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்து வேதங்கள் தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின.
குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால் அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இவர் லட்சுமி ஹயக்ரீவரானார். வேதங்களை மீட்டவர் என்பதால் ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வமும் சேரும் என்பதால் லட்சுமியை இடது தொடையில் அமர்த்தி இருக்கின்றார்.