ADDED : நவ 24, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி, பரவலாக பெய்து வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் விழுப்புரம், கெடார், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல், மணிலா, உளுந்து விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

