ADDED : ஏப் 17, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார், 47. விவசாயி. இவரது மனைவி செல்வி, 40; தம்பதிக்கு, 13 மற்றும் 10 வயதில் இரு பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த 15ம் தேதி கோவிந்தன் என்பவரது நிலத்தின் கொட்டகையில் உத்திரகுமார் படுத்திருந்தார். அங்கு வந்த மனைவி செல்வி, கணவரை ஆபாசமாக திட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
படுகாயம் அடைந்த உத்திரகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து செல்வியை கைது செய்தனர்.