ADDED : பிப் 19, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம், ராகவன்பேட்டையை சேர்ந்தவர் பூர்ணிமா, 39; டாக்டர். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
திருப்பத்துார் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் வேலு, 50; இருவரும் காதலித்து, 2023, ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், வேலுவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்ப தாக கூறி பூர்ணிமா தட்டிகேட்டுள்ளார்.
இதனால், வேலு திட்டி, கொடுமைப்படுத்தியதால், 7 மாத பெண் குழந்தையுடன் ராகவன்பேட்டையில் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் பூர்ணிமா புகார் அளித்துள்ளார்.
போலீசார் வேலுமீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வேலு தற்போது இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

