ADDED : ஜன 20, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: இரண்டு குழந்தைகளுடன் மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மனைவி ரேவதி, 27; இவரது மகன்கள் விஷாந்த், 6; நிஷாந்த், 3; ஆகியோருடன் கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.சதீஷ் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
