ADDED : ஜூலை 08, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கண்டாச்சிபுரம் அடுத்த வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் மனைவி பாரதி, 22; இவர், நேற்று திருப்பூர் மாவட்டம், மூனாரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சென்றவரை காணவில்லை. ஊருக்கும் செல்லவில்லை. இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
