ADDED : ஜூலை 05, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த மாதப்பூண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் இளமுத்து 48; இவரது மனைவி கோகிலா, 42; இவர்கள் இருவரும் சென்னை அம்பத்துாரில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக மாதப்பூண்டியில் தங்கி இருந்தனர். கடந்த ஜூன், 30ம் தேதி வீட்டில் இருந்து கோகிலா காணாமல் போய்விட்டார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது கணவர் இளமுத்து, நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.