/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராபிக் சிக்னல்களில் வாடும் மக்கள் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுமா?
/
டிராபிக் சிக்னல்களில் வாடும் மக்கள் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுமா?
டிராபிக் சிக்னல்களில் வாடும் மக்கள் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுமா?
டிராபிக் சிக்னல்களில் வாடும் மக்கள் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 21, 2025 04:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் டிராபிக் சிக்னல்களில் கடும் வெயிலில் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் பசுமை பந்தல் (கிரீன் நெட்) அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 9:00 மணிக்கே துவங்கும் வெயில் படிப்படியாக அதிகரித்து பகல் முழுவதும் சுட்டெரிக்கிறது.
இந்த வெயில் தாக்கம் மாலை 5:00 மணி வரை தொடர்வதால், பகல் நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் வெயிலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
கடுமையான வெயில் காரணமாக சாலையில் இருந்து எதிரொலிக்கும் அனல் காற்றால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீண்ட நேரம் கடும் வெயிலில் நின்று வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த ஆண்டு தனியார் அமைப்பு சார்பில் சென்னை மார்க்க சாலை, திருச்சி மார்க்க சாலையில் நிழல் தரும் பசுமை பந்தல் (கிரீன் நெட்) அமைத்தனர்.
திருச்சி, சென்னை மார்க்கத்தில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்தாண்டு கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், பசுமை பந்தல் ஏதும் அமைக்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 8 டிராபிக் சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைத்துள்ளனர். அதுதவிர, பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
அதுபோல் விழுப்புரம் மாவட்டத்திலும், டிராபிக் சிக்னல்களில் குறைந்தபட்சம் நிழல் தரும் பசுமை பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

