ADDED : பிப் 03, 2026 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் சார்பில் நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி கறிக்கோழி வளர்ப்பிற்கு, விவசாயிகளுக்கு அடிப்படை கூலியாக ரூ.20, பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு ரூ.25, காடை வளர்ப்பிற்கு ஒரு காடைக்கு ரூ.7 நிர்ணயிக்க வேண்டும்; மேலும் தமிழக அரச தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் இயற்றுதல் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

