sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை.... அமைக்கப்படுமா:சிறு, குறு தொழிற்சங்கத்தினர் எதிர்பார்ப்பு

/

விழுப்புரத்தில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை.... அமைக்கப்படுமா:சிறு, குறு தொழிற்சங்கத்தினர் எதிர்பார்ப்பு

விழுப்புரத்தில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை.... அமைக்கப்படுமா:சிறு, குறு தொழிற்சங்கத்தினர் எதிர்பார்ப்பு

விழுப்புரத்தில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை.... அமைக்கப்படுமா:சிறு, குறு தொழிற்சங்கத்தினர் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 13, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டம், பஸ், ரயில் போக்குவரத்திற்கு ஏற்ற வசதிகள் உள்ள பகுதியாக இருந்தும், மாவட்டத்தின் தலைநகரிலேயே தொழிற்பேட்டை, மும்முனை மின்சாரம் போன்ற வாய்ப்புகளின்றி பின் தங்கியுள்ளது.

இதனால், மாவட்டம் தொழில்துறையில் வளர்ச்சியடையவும், இங்குள்ள தொழில் முனைவோர், இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து, மாவட்ட குறு, சிறு தொழில் சங்கத் தலைவர் அம்மன் கருணாநிதி உள்ளிட்டோர் கூறியதாவது:

விழுப்புரத்தில் கனரக தொழிற்சாலை வர வேண்டும். விவசாயம் மூலம் விளையக்கூடிய பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பதற்கு தொழிற்சாலைகள், விழுப்புரத்தில் வர்த்தக மையம் அமைத்து பொருட்காட்சி நடத்தவும் வழிசெய்ய வேண்டும்.

விழுப்புரம் நகர விரிவாக்கத்திற்காக திருச்சி - சென்னை நெடுஞ்சாலைகளில் இருந்த குறுந்தொழில் நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால், அவர்களுக்கு தொழில் செய்ய இடமின்றி இருக்கின்றனர். விழுப்புரம் நகராட்சி அருகே சிட்கோ மூலம் தொழிற்பேட்டை கொண்டுவர வேண்டும். செஞ்சி சாலை, திருக்கோவிலுார் சாலை. விக்கிரவாண்டி பகுதியில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.

தொழில் அவணங்களை பெற இணைய வசதி அவசியம் என்பதால், அதிவேக இணைய வசதி கிடைக்கச் செய்ய வேண்டும். புதிய தொழில் தொடங்க அரசு துறைகள் ஆவணங்கள் பெற அலைகழிப்பு ஏற்படுகிறது.

குறிப்பிட்ட துறைகளையும் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், கடந்த காலங்களில் இரும்பு கதவுகள், ஜன்னல்கள், குப்பை அள்ளும் வண்டி போன்றவைகளை குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்தனர்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கொள்முதல் செய்யாததால் தொழில் வாய்ப்பு இல்லாமல் போனது. மாவட்டத்தில் இயங்கி வரும் அரிசி ஆலைகள் மூலம் கிடைக்கும் தவிட்டை பயன்படுத்தி உணவு எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம் 112 கி.வா., முதல் 150 கி.வா., ஆக உயர்த்தி அளித்துள்ளனர். ஆனால், 112 கி.வா.,க்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு உயர் அழுத்த மின்சாரத்திற்கு இணையாக சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களுக்கு ஏற்கனவே இருந்ததை போல் நிலையான கட்டணத்தை மாற்ற வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

தொழில் தொடங்க அனுமதி பெற, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், விதிகளின்படி இயந்திரங்களுக்கான மதிப்பீட்டை எடுக்காமல், நிலத்தின் மதிப்பையும் சேர்த்து கணக்கிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் பலவிதமான வரிகள் அதிகப்படியாக வசூல் செய்வதை மாற்றி ஒரே வரியாக குறுந்தொழிலுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை, தொடர்ந்து அரசுக்கு முன்வைத்து வருவதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us