/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றுத் திருவிழாவில் குவிந்த குப்பைகள் முழுதும் அகற்றப்படாத அவலம் அதிகாரிகள் கவனிப்பார்களா?
/
ஆற்றுத் திருவிழாவில் குவிந்த குப்பைகள் முழுதும் அகற்றப்படாத அவலம் அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஆற்றுத் திருவிழாவில் குவிந்த குப்பைகள் முழுதும் அகற்றப்படாத அவலம் அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஆற்றுத் திருவிழாவில் குவிந்த குப்பைகள் முழுதும் அகற்றப்படாத அவலம் அதிகாரிகள் கவனிப்பார்களா?
ADDED : ஜன 23, 2026 06:06 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ஆற்றுத் திருவிழாக்களில், ஆறுகளில் பொதுமக்கள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் குப்பைகள் முழுதும் அகற்றப்படாமல் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி தென்பெண்ணை, வராகநதி, பம்பை ஆறு உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளில் 24 இடங்களில் ஆற்றுத்திருவிழா நடந்தது.
குறிப்பாக, விழுப்புரம் அடுத்த பிடாகம், பேரங்கியூர் பகுதியிலும், கோலியனுார் அடுத்த சின்ன கள்ளிப்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பேப்பர்கள், கேரி பேக்குகள், கப்புகள், குளிர்பான பாட்டில்கள், கரும்பு சக்கைகள், தோகைகள் என கழிவுகளை சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் அப்படியே ஆற்று மணலில் வீசிச் சென்றனர்.
இதனால், பிடாகம், பேரங்கியூர் ஆற்று பகுதி யில் பல கி.மீ., சுற்றளவில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்தன.
குப்பைகளை பேரங்கியூர், கரடிப்பாக்கம், ஏமப்பேர், ஏனாதிமங்கலம் துாய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக சேகரித்தனர்.
இதே போல், சின்னகள்ளிப்பட்டு ஆற்றில், பஞ்சமாதேவி, வி.அகரம், சின்னகள்ளிப்பட்டு துாய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. 4 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமானது. அதனை மூட்டைகள் கட்டி, விற்பனைக்கு அனுப்பம் பணி நடந்தது.
இருப்பினும், குப்பைகள் முழுமையாக அகற்றப்படாததால் இன்னமும் கரும்பு தோகைகள், சக்கைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சிதறி கிடக்கின்றன.
இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆற்று பகுதியை முழுமையாக துாய்மைப் படுத்த வேண்டும். இனி எதிர்காலங்களில், திருவிழாவிற்கு முன்பே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், தற்காலிக குப்பைத் தொட்டி கள் வைத்து சேகரிக்கவும், பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

