/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வல்லத்தில் மூடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
/
வல்லத்தில் மூடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
வல்லத்தில் மூடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
வல்லத்தில் மூடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : டிச 31, 2024 06:32 AM
வல்லத்தில் மூடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சியில் தற்போது இயங்கி வரும் போலீஸ் ஸ்டேஷன் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1931ம் ஆண்டு துவங்கியது. அப்போது இருந்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் 37 போலீசாரை நியமித்தனர். அதே நேரத்தில் வல்லத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொண்டு புறக்காவல் நிலையமும் இயங்கி வந்தது.
1960ம் ஆண்டு வல்லத்தில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷனை மூடிவிட்டனர். இதன் கீழ் இருந்த பல கிராமங்களை செஞ்சி காவல் நிலையத்துடன் சேர்த்து விட்டனர். இதனால் செஞ்சி காவல் நிலைய எல்லைக்குள் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
செஞ்சி போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டு 93 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனால் குற்ற செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.செஞ்சி காவல் நிலையத்தின் எல்லைகள் காவல் நிலையத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளது. இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளால் அனைத்து கிராமங்களையும் கண்காணிக்க முடியவில்லை.
வல்லத்தில் தற்போது காவலர் குடியிருப்பு உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் கட்டவும் காவல் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. எனவே வல்லத்தில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை முழு அளவிலான போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மயிலம் தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்றது. அப்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., மாசிலாமணியின் கோரிக்கையை அ.தி.மு.க., அரசு ஏற்க வில்லை. தற்போது மயிலம் தொகுதியில் பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளார். இவரும் இதே கோரிக்கையை சட்டசபையில் முன்வைத்தார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வெற்றி பெற்றதால் இந்த முறை தி.மு.க., அரசும் போலீஸ் ஸ்டேஷன் திறக்காமல் கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டது.
பொது மக்களின் நியாயமான கோரிக்கை என்பதால் முதல்வர் பரிசீலனை செய்து விரைவில் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.