/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?
/
விழுப்புரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?
விழுப்புரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?
விழுப்புரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?
ADDED : ஜூலை 21, 2025 04:48 AM
விழுப்புரம் : விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்தில் குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையாவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் 22 கே.வி., (கிலோ வாட்ஸ்) கொண்ட மின்மாற்றிகள் மூலம் விழுப்புரம் நகரம், ஜானகிபுரம், வளவனுார், கோலியனுார், அய்யூர் அகரம் உட்பட 170க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக கோடை காலங்களில், நெய்வேலியில் இருந்து வரும் மின் பாதையில் குறைவாக மின் உற்பத்தி கிடைப்பதால், விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்திற்கு 110 கே.வி., வர வேண்டிய நிலையில் 106 கே.வி., மட்டுமே கிடைக்கும்.
இதனால், இங்கு குறைந்தழுத்த மின்சாரம் ஏற்பட்டு, பொதுமக்கள் பலரும் பாதிப்பதோடு, மின்துறை சார்ந்த அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவர். இதே நிலை விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் தற்போதும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக, இங்குள்ள மின் மாற்றிகள் மூலம் சப்ளையாகும் மின்சாரத்தில் குறைந்த மின்னழுத்தம் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'நெய்வேலி மின்பாதையில் இருந்து வரும் மின்சாரம் குறைவாக கிடைப்பதால், இங்கு குறைந்தழுத்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க முடிந்தவரை, சரிசெய்து சீரான மின்சாரத்தை விநியோக்கின்றோம்.
ஒரு சில இடங்களில் குறைந்தழுத்த மின் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும்' என்றனர்.
இருந்த போதிலும், குறைந்தழுத்த மின் பிரச்னை மட்டுமின்றி ஒரு சில நேரங்களில் திடீரென அதிகமான மின்சப்ளை வருவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வெடித்து சேதமாகிறது.
மின்நுகர்வோர்களின் சூழலை கருத்தில் கொண்டு, மின்வாரிய அதிகாரிகள் குறைந்தழுத்த மின்சார பிரச்னையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.