sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா: கானல் நீராகிப்போன நவீன கலையரங்கம்

/

விழுப்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா: கானல் நீராகிப்போன நவீன கலையரங்கம்

விழுப்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா: கானல் நீராகிப்போன நவீன கலையரங்கம்

விழுப்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா: கானல் நீராகிப்போன நவீன கலையரங்கம்

1


UPDATED : ஜன 22, 2026 02:09 PM

ADDED : ஜன 22, 2026 05:57 AM

Google News

UPDATED : ஜன 22, 2026 02:09 PM ADDED : ஜன 22, 2026 05:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அரசின் சார்பில, புதிய கலையரங்கம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொருட்காட்சிகள், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கலையரங்கம் அவசிய தேவையாக உள்ளது.

இதற்காக ஒவ்வொரு முறையும், அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், அரசின் பல்வேறு திட்டங்கள் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இத்துடன், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு, பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.

ஆண்டுதோறும் அரசின் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு, பிரமாண்டமான அரங்கம் அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நகராட்சி திடலில் பிரமாண்டமான அளவில், அரசு சார்பில் கலையரங்கை உருவாக்கிட வேண்டும். இங்கு, விழா மேடை பக்கவாட்டில் மின் விளக்கு வசதி, மைதானத்தில் உயர்கோபுர மின் விளக்குகள், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசு நலத்திட்ட பயனாளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, அரசு நிர்வாகம் சிரமமின்றி நடத்த முடியும்.

அத்துடன், அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகை அடிப்படையில், கலையரங்கத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கலாம். இதன் மூலம் நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதற்கு வழி வகை ஏற்படும்.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கலையரங்கம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காணாமல் போன கலையரங்கம்

விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாறு ஆண்டுகள் பழைமையான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கலையரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நடந்த பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெ. மற்றும் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பேசியுள்ளனர். இதனை முறையாக பராமரிக்காததால், கலையிழந்து பாழடைந்து போனது. காலப்போக்கில், நகராட்சி குப்பைகள் கொட்டி, கலையரங்கம் வெளியே தெரியாமல் மறைந்து போனது. இந்த மைதானத்தைச் சுற்றி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு விசாலமான இடத்தில் கலையரங்கம் அமைத்திட வேண்டும்.








      Dinamalar
      Follow us