/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியாகிகள் மணி மண்டபத்தில் பல்நோக்கு மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

ADDED : ஜூலை 08, 2025 12:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் இடஒதுக்கீட்டு தியாகிகள் மணி மண்டபத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தை, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், இடஒதுக்கீடு தியாகிகளுக்கான மணி மண்டபத்தை கடந்த ஜனவரி 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த வளாகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், 5.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கான மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 78 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தில், நினைவு மண்டபம், அதில், 21 தியாகிகளின் பெயருடன் கூடிய தனித்தனியான மார்பளவு சிலைகள், அருகிலேயே சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மேடை, பல்நோக்கு மண்டபம், உணவு அருந்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தவதற்கான கழிவறை வசதிகள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், புல்வெளி மற்றும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மணி மண்டபம் வளாகம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், இங்குள்ள பல்நோக்கு மண்டபத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதற்கான உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.